Sunday, February 10, 2013

உயிர் - ஒரு தேடல்


 உயிரில்
மெய்யை சேர்த்து
உயிர்மெய் ஆனது

மெய்யின் புள்ளி
உயிரில் மறைந்து
உயிர்மெய் எழுத்தானது

...
மெய்யின் துளி
கருவறையில் கலந்து
உயிராய் ஜனித்தது

மெய்யோடு சேர்ந்த
உயிரும் வளர்ந்தது
மெய்யோடு கலந்தது

காதலனுக்கு
காதலியின் பேச்சு
உயிர்
காதலிக்கு
காதலனின் மூச்சு
உயிர்

மனைவிக்கு
கணவனின் அன்பு
உயிர்
கணவனுக்கு
மனைவியின் நேசம்
உயிர்

தாய்க்கு
குழந்தையின் நலம்
உயிர்
குழந்தைக்கு
தாயின் புலம்
உயிர்

உயிர்
இல்லையேல்
பேச்சில்லை
மூச்சில்லை

பேச்சிலா உயிர்?
இல்லை
பேச்சில்லாமல்
உயிர் வாழ்கின்றனரே

மூச்சிலா உயிர்?
இல்லை
செயற்கை சுவாசம்
கொண்டு சிலர்
உயிர் வாழ்கின்றனரே

பின்,
எங்கே உயிர்...
எங்கே உயிர்...
என்று மெய்முழுதும்
தேடினேன்

மெய்யில் உயிர்
எது என்று
பிரிக்கமுடியாத படி
உயிரும் வளர்ந்து விட்டது

உயிர் போகுமுன்
தேடவேண்டும்
உயிரை...
நான்
தேடி தேடி
சோர்ந்து விட்டேன்..
நீங்கள்
கிடைத்தால் சொல்லுங்கள்..




2 comments:

  1. “உயிர் போகுமுன்// தேடவேண்டும்// உயிரை...// நான் //தேடி தேடி // சோர்ந்து விட்டேன்..// நீங்கள் // கிடைத்தால் சொல்லுங்கள்..//” என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா

    ReplyDelete
  2. தங்களின் ஊக்கத்திற்கு நன்றி...
    -ஆடலரசன்@Natarajan
    ஆடலரசின் எண்ணங்களும் கவிதைகளும் http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal

    ReplyDelete