Friday, January 25, 2013

சுவாமி விவேகானந்தர் (150 வது பிறந்தநாள் 12Jan2013)

Swami Vivekananda was Remembered in the 25Jan2013 (150th Birthday), Tamil ladies Association ( www.tamilladiesassociationdubai.com) Monthly gathering. I had oppurtunity to share following poem about Swami Vivekananda.Thanks for Encouragement.

25Jan2013 அன்று நடந்த தமிழ் பெண்கள் சங்கம் (
www.tamilladiesassociationdubai.com) மாதாந்திர கூட்டத்தில் சுவாமி விவேகானந்தர் (150 வது பிறந்தநாள் 12Jan2013) நினைவாக, நான் பின்வரும் கவிதை பகிர்ந்து கொண்டேன். ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
ஆடலரசன்@Natarajan


கூடியிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்
வாய்பளித்த தமிழ் பெண்கள் சங்கத்திற்கு நன்றி

நரேந்திர நாத் தத்தா என்றால் தெரியாதவற்கும்
சுவாமி விவேகானந்தரை தெரியும்

அப்படியும் தெரியாதவருக்கு
தெரியாத தவறுக்கு
என் சிறிய அர்ப்பணம்

கல்கத்தாவில் பிறந்தவன் இவன்
உலகத்தில் தலை சிறந்த இளைஞன் அவன்

இன்றிருந்தால் 150 வயதாயிருக்கும் அவனுக்கு
அவன் புகழுக்கும் வயதுண்டோ

இந்தியாவின் பெருமையும்
இந்தியரின் திறனையும்
உலகுக்கு உணர்த்திய
உன்னதமானவன் இவன்

இந்துமத்தின் அருமையும்
யோகாவின் சிறப்பையும்
இவ்வுலகத்தில் அனைவரும்
அறிய அறிவித்தவன் அவன்

எழுமின் விழுமின்
எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின்
என எல்லோருக்கும்
எழுச்சியுரை எழுதிய எங்கள் இளைஞன்

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடன் இவன்
இராமகிருஷ்ண மடத்தை நிறுவியவன் அவன்

அமெரிக்காவின் சிகாகோ மண்ணில்
உலக மதங்களின் மகாநாட்டில்

கன்னி பேச்சு பேசும் முன்
கன்னியாகுமரியில் த்யானித்த காவி துறவியவன்

அமெரிக்க சகோதர சகோதிரிகளே
என்று கர்ஜித்த காவிச் சிங்கம் அவன்

கரகோஷம் விண்ணை பிளக்க
நம் தேசத்தின் பண் னை விளக்க

அன்னியரிடத்திலும்
சகோதரத்துவத்தை வளர்த்த சகோதரன்
இந்தியாவின் பிரதிநிதியாக பிரகாசித்தவன்

இந்து மதத்தின் பெருமைக்கு பெருமை சேர்த்தவன்
யோகாவின் சிறப்புகளை சிறப்பாய் போதித்தவன்

அயல்நாட்டினரும் இந்து மதத்தை மதிக்க
அயராது உழைத்த உத்தமன்

இந்து மதத்தினை பாமரரும் உணரும்
வண்ணம் பவிசாக உரைத்தவன்

மகாத்மா காந்தியும் சர்தார் படேலும் பார்த்து
வியந்த விஞ்ஞான விசித்திரன் அவன்

இன்று யோகா உலகெங்கிலும் விரிந்திருக்க
வித்திட்ட முன்னவன் அவன்

12 ஜனவரி அவன் பிறந்த நாளை
தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது
அவனுடைய பெருமை இல்லை

ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை
ஒவ்வொரு இளைஞனுக்கும் பெருமிதம்

Angry birdம் video gamesம் விளையாடி களித்திருக்கும்
இளைஞர்ககுக்கு புத்துணர்ச்சி ஊட்ட

விவேகனந்தர் பற்றியும்
வேகமும் விவேகமும் உள்ள
எழுச்சி எழுத்துகளை
எண்ணத்தில் ஏற்றுவது பெற்றோர் நம் கடமை

வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு
நன்றி நன்றி நன்றி





No comments:

Post a Comment