Tuesday, February 12, 2013

SVe Shekherக்கு கண் கல்பட்டு - விரைவில் குணமாக பிரார்த்தனை

http://www.facebook.com/photo.php?fbid=10151307268132496&set=a.394057107495.171258.738622495&type=1




கல்லடி பட்டதையும்
சொல்லால் அடிக்கும்
கில்லாடி எங்கள்
நகைச்சுவை நாயகர்...
 
கண்ணில் ரெட் லைட்
கண்டும் ஹை லைட்டாய்
ஹார்லிக்க்ஸ் லைட் கேட்கும்
ஹார்ட்டை லைட்டாக்கும் நண்பர்...

இன்றும் தங்கள் நகைச்சுவைக்கு
என்றும் உங்கள் ரசிகர்கள் இருக்க
கற்கள் அனுமதி இல்லை என
அழைக்கும் டைமிங்தான் நண்பரே ...

இந்த சூழ்நிலையிலும்
கண் காத்த நண்பர்களையும்
கண் மருத்துவரையும்
நினைவு கூர்ந்த நல்லவர் ...

கண்கள்
கலங்கினாலும்
கலங்காமல்
கலக்கும்
கலைஞர்
விரைவில் குணமாக
இறைவனை பிரார்த்திக்கிறேன்...
 

அன்புடன்
© ஆடலரசன்@Natarajan -2013
Link / like my page http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal


வினோதினி ... வீணோ இனி ... நல்ல உள்ளங்களின் பல பிரார்த்தனைகள்...


http://bit.ly/12Im6dj

வினோதினி
வீணோ இனி
நல்ல உள்ளங்களின் பல பிரார்த்தனைகள்...

திராவகம் ஒரு குவளை வீசிய
கிராதகன்தன் ஒரு தலைகாதலை
சொல்ல வேறு வழியில்லையா...

புதுடெல்லியில் விதையாய் வீழ்ந்த
சகோதரியால் வந்த பெண்கள் விழிப்புணர்வு போல்
வினோதினி உன்னை கண்ணாய் வளர்த்து ஒரு ...

பெண்ணாய் இழந்த பெற்றோருக்கு
சமர்பனமாய் முழங்க உற்றரும்
மற்றாரும் வழங்குவோம் இரத்தத்தில் ...

இனி ஒரு பெண்ணுக்கும் இல்லை
இந்த கொடுமை என சட்டம் வர
ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு சமர்பிப்போம் ...
:'(

- ஆடலரசன்@Natarajan -12/Feb/2013

Sunday, February 10, 2013

உயிர் - ஒரு தேடல்


 உயிரில்
மெய்யை சேர்த்து
உயிர்மெய் ஆனது

மெய்யின் புள்ளி
உயிரில் மறைந்து
உயிர்மெய் எழுத்தானது

...
மெய்யின் துளி
கருவறையில் கலந்து
உயிராய் ஜனித்தது

மெய்யோடு சேர்ந்த
உயிரும் வளர்ந்தது
மெய்யோடு கலந்தது

காதலனுக்கு
காதலியின் பேச்சு
உயிர்
காதலிக்கு
காதலனின் மூச்சு
உயிர்

மனைவிக்கு
கணவனின் அன்பு
உயிர்
கணவனுக்கு
மனைவியின் நேசம்
உயிர்

தாய்க்கு
குழந்தையின் நலம்
உயிர்
குழந்தைக்கு
தாயின் புலம்
உயிர்

உயிர்
இல்லையேல்
பேச்சில்லை
மூச்சில்லை

பேச்சிலா உயிர்?
இல்லை
பேச்சில்லாமல்
உயிர் வாழ்கின்றனரே

மூச்சிலா உயிர்?
இல்லை
செயற்கை சுவாசம்
கொண்டு சிலர்
உயிர் வாழ்கின்றனரே

பின்,
எங்கே உயிர்...
எங்கே உயிர்...
என்று மெய்முழுதும்
தேடினேன்

மெய்யில் உயிர்
எது என்று
பிரிக்கமுடியாத படி
உயிரும் வளர்ந்து விட்டது

உயிர் போகுமுன்
தேடவேண்டும்
உயிரை...
நான்
தேடி தேடி
சோர்ந்து விட்டேன்..
நீங்கள்
கிடைத்தால் சொல்லுங்கள்..