Tuesday, February 12, 2013

SVe Shekherக்கு கண் கல்பட்டு - விரைவில் குணமாக பிரார்த்தனை

http://www.facebook.com/photo.php?fbid=10151307268132496&set=a.394057107495.171258.738622495&type=1




கல்லடி பட்டதையும்
சொல்லால் அடிக்கும்
கில்லாடி எங்கள்
நகைச்சுவை நாயகர்...
 
கண்ணில் ரெட் லைட்
கண்டும் ஹை லைட்டாய்
ஹார்லிக்க்ஸ் லைட் கேட்கும்
ஹார்ட்டை லைட்டாக்கும் நண்பர்...

இன்றும் தங்கள் நகைச்சுவைக்கு
என்றும் உங்கள் ரசிகர்கள் இருக்க
கற்கள் அனுமதி இல்லை என
அழைக்கும் டைமிங்தான் நண்பரே ...

இந்த சூழ்நிலையிலும்
கண் காத்த நண்பர்களையும்
கண் மருத்துவரையும்
நினைவு கூர்ந்த நல்லவர் ...

கண்கள்
கலங்கினாலும்
கலங்காமல்
கலக்கும்
கலைஞர்
விரைவில் குணமாக
இறைவனை பிரார்த்திக்கிறேன்...
 

அன்புடன்
© ஆடலரசன்@Natarajan -2013
Link / like my page http://www.facebook.com/Aadalarasin.Ennangal.Kavithaigal


வினோதினி ... வீணோ இனி ... நல்ல உள்ளங்களின் பல பிரார்த்தனைகள்...


http://bit.ly/12Im6dj

வினோதினி
வீணோ இனி
நல்ல உள்ளங்களின் பல பிரார்த்தனைகள்...

திராவகம் ஒரு குவளை வீசிய
கிராதகன்தன் ஒரு தலைகாதலை
சொல்ல வேறு வழியில்லையா...

புதுடெல்லியில் விதையாய் வீழ்ந்த
சகோதரியால் வந்த பெண்கள் விழிப்புணர்வு போல்
வினோதினி உன்னை கண்ணாய் வளர்த்து ஒரு ...

பெண்ணாய் இழந்த பெற்றோருக்கு
சமர்பனமாய் முழங்க உற்றரும்
மற்றாரும் வழங்குவோம் இரத்தத்தில் ...

இனி ஒரு பெண்ணுக்கும் இல்லை
இந்த கொடுமை என சட்டம் வர
ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு சமர்பிப்போம் ...
:'(

- ஆடலரசன்@Natarajan -12/Feb/2013

Sunday, February 10, 2013

உயிர் - ஒரு தேடல்


 உயிரில்
மெய்யை சேர்த்து
உயிர்மெய் ஆனது

மெய்யின் புள்ளி
உயிரில் மறைந்து
உயிர்மெய் எழுத்தானது

...
மெய்யின் துளி
கருவறையில் கலந்து
உயிராய் ஜனித்தது

மெய்யோடு சேர்ந்த
உயிரும் வளர்ந்தது
மெய்யோடு கலந்தது

காதலனுக்கு
காதலியின் பேச்சு
உயிர்
காதலிக்கு
காதலனின் மூச்சு
உயிர்

மனைவிக்கு
கணவனின் அன்பு
உயிர்
கணவனுக்கு
மனைவியின் நேசம்
உயிர்

தாய்க்கு
குழந்தையின் நலம்
உயிர்
குழந்தைக்கு
தாயின் புலம்
உயிர்

உயிர்
இல்லையேல்
பேச்சில்லை
மூச்சில்லை

பேச்சிலா உயிர்?
இல்லை
பேச்சில்லாமல்
உயிர் வாழ்கின்றனரே

மூச்சிலா உயிர்?
இல்லை
செயற்கை சுவாசம்
கொண்டு சிலர்
உயிர் வாழ்கின்றனரே

பின்,
எங்கே உயிர்...
எங்கே உயிர்...
என்று மெய்முழுதும்
தேடினேன்

மெய்யில் உயிர்
எது என்று
பிரிக்கமுடியாத படி
உயிரும் வளர்ந்து விட்டது

உயிர் போகுமுன்
தேடவேண்டும்
உயிரை...
நான்
தேடி தேடி
சோர்ந்து விட்டேன்..
நீங்கள்
கிடைத்தால் சொல்லுங்கள்..




Friday, January 25, 2013

சுவாமி விவேகானந்தர் (150 வது பிறந்தநாள் 12Jan2013)

Swami Vivekananda was Remembered in the 25Jan2013 (150th Birthday), Tamil ladies Association ( www.tamilladiesassociationdubai.com) Monthly gathering. I had oppurtunity to share following poem about Swami Vivekananda.Thanks for Encouragement.

25Jan2013 அன்று நடந்த தமிழ் பெண்கள் சங்கம் (
www.tamilladiesassociationdubai.com) மாதாந்திர கூட்டத்தில் சுவாமி விவேகானந்தர் (150 வது பிறந்தநாள் 12Jan2013) நினைவாக, நான் பின்வரும் கவிதை பகிர்ந்து கொண்டேன். ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
ஆடலரசன்@Natarajan


கூடியிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்
வாய்பளித்த தமிழ் பெண்கள் சங்கத்திற்கு நன்றி

நரேந்திர நாத் தத்தா என்றால் தெரியாதவற்கும்
சுவாமி விவேகானந்தரை தெரியும்

அப்படியும் தெரியாதவருக்கு
தெரியாத தவறுக்கு
என் சிறிய அர்ப்பணம்

கல்கத்தாவில் பிறந்தவன் இவன்
உலகத்தில் தலை சிறந்த இளைஞன் அவன்

இன்றிருந்தால் 150 வயதாயிருக்கும் அவனுக்கு
அவன் புகழுக்கும் வயதுண்டோ

இந்தியாவின் பெருமையும்
இந்தியரின் திறனையும்
உலகுக்கு உணர்த்திய
உன்னதமானவன் இவன்

இந்துமத்தின் அருமையும்
யோகாவின் சிறப்பையும்
இவ்வுலகத்தில் அனைவரும்
அறிய அறிவித்தவன் அவன்

எழுமின் விழுமின்
எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின்
என எல்லோருக்கும்
எழுச்சியுரை எழுதிய எங்கள் இளைஞன்

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடன் இவன்
இராமகிருஷ்ண மடத்தை நிறுவியவன் அவன்

அமெரிக்காவின் சிகாகோ மண்ணில்
உலக மதங்களின் மகாநாட்டில்

கன்னி பேச்சு பேசும் முன்
கன்னியாகுமரியில் த்யானித்த காவி துறவியவன்

அமெரிக்க சகோதர சகோதிரிகளே
என்று கர்ஜித்த காவிச் சிங்கம் அவன்

கரகோஷம் விண்ணை பிளக்க
நம் தேசத்தின் பண் னை விளக்க

அன்னியரிடத்திலும்
சகோதரத்துவத்தை வளர்த்த சகோதரன்
இந்தியாவின் பிரதிநிதியாக பிரகாசித்தவன்

இந்து மதத்தின் பெருமைக்கு பெருமை சேர்த்தவன்
யோகாவின் சிறப்புகளை சிறப்பாய் போதித்தவன்

அயல்நாட்டினரும் இந்து மதத்தை மதிக்க
அயராது உழைத்த உத்தமன்

இந்து மதத்தினை பாமரரும் உணரும்
வண்ணம் பவிசாக உரைத்தவன்

மகாத்மா காந்தியும் சர்தார் படேலும் பார்த்து
வியந்த விஞ்ஞான விசித்திரன் அவன்

இன்று யோகா உலகெங்கிலும் விரிந்திருக்க
வித்திட்ட முன்னவன் அவன்

12 ஜனவரி அவன் பிறந்த நாளை
தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது
அவனுடைய பெருமை இல்லை

ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை
ஒவ்வொரு இளைஞனுக்கும் பெருமிதம்

Angry birdம் video gamesம் விளையாடி களித்திருக்கும்
இளைஞர்ககுக்கு புத்துணர்ச்சி ஊட்ட

விவேகனந்தர் பற்றியும்
வேகமும் விவேகமும் உள்ள
எழுச்சி எழுத்துகளை
எண்ணத்தில் ஏற்றுவது பெற்றோர் நம் கடமை

வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு
நன்றி நன்றி நன்றி





Monday, January 14, 2013

உழவர் திருநாளில், உழவனுக்கு ஒரு வணக்கம் - 14/Jan/2013

 


தை பொறந்தால் வழிபிறக்கும் என்று
விதை நெல்லுக்கும் விழிபிதுங்கி வாழும்
கதை சொல்வேன் விழிநீருடன் நாளும்
கீதையும் சொல்லாத பழியாருக்கு? கேளும்...

பொய்க்கும் மழையை நினையாது
மெய்க்குள் வியர்வையால் நனைந்து
வாய்க்கால் வெட்டும் நண்பன்

நிலத்தில் நம்பிக்கையை நட்டு
களத்தில் எதிர்காலத்தை விட்டு
நிஜத்தில் நசுக்கப்படும் தோழன்

வாடிய பயிரைகண்டு வாடி
ஓடியோடி பயிரை வாடாமல்
உயிரை கொண்டுவந்த பிரம்மா.

மின்வெட்டால் நேர்ந்த வறட்சியை
தன்னுடர்கட்டால் பசுமை புரட்சியை
நீரிறைத்து காக்கும் புரட்சியாளன்

தான் விளைத்ததை தான் உண்ணாமல்
தன்ஒரு வயிற்று கூழுக்கும் கஞ்சிக்கும்
தாரை வார்க்கும் தன்னல மற்றவன்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றயைவர்
தொழுதுண்டு பின்செல்வர் வள்ளுவர் வாக்கு
அழுது துவண்டாலும் அவன் நமக்கு
உணவளிக்கும் பழுதில்லா அட்சய பாத்திரம்

உயிர் காக்கும் உணவளிக்கும் அவனுக்கு
உயிரின் எழுத்தாய்(அ...ஆ.......ஔ) ஒரு சமர்ப்பணம்...

வன் மரக்கறி உண்டானோ தெரியவில்லை எமக்கு
னால் எலிக்கறி உண்டசோகம் தெரியுமோ எவர்க்கு
லையில் காய்கறியுடன் உண்ண தெரியும் நமக்கு
கையுடன் நன்றிகடனும் உண்டு புரியுமோ அவனுக்கு
லையில் கொதித்த உன்னத சோறுண்டு நமக்கு
ர்காட்டில் மிதித்த தன்பாத சேறுமில்லை அவனுக்கு
ட்டு திக்கும் உணவளிக்கும் வள்ளலவன் நமக்கு
ர்பிடித்ததில் மிச்சம் உணவில்லா வறுமை அவனுக்கு
ம்பூதங்கள் கைவிட்டாலும் இவன் திறமை இவனுக்கு
ருபோதும் கைவிட்டதில்லை அவன் பொறுமை அவனுக்கு
ட்டு கூரையில் காகத்திற்கு உணவளிக்கும் நமக்கு
டதமாய் உணவுதரும் உழவனுழைப்பு தெரிவதில்லை எவர்க்கும்
உழவர் திருநாள்,
உழுவோரை வணங்கும் ஒருநாள்
உழைபோரை போற்றும் பெருநாள்
நல்லோருக்கு இனிய தமிழர் திருநாளும்
எல்லோருக்கும் என் இனிய உழவர் பெருநாளும்
தமிழல்லோரும் போற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Thursday, January 3, 2013

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்..(3-Jan-1760)

Veerapandiya Kattabomman Birthday ..(3-Jan-1760)
 =====================================


யாரை கேட்கிறாய் வரி என்று
தாரை முழங்கிய வீரனுக்கு
படையல் இந்த வரிகள்
...ஆடலரசன்@Natarajan

இன்று சுதந்திரம் சுத்தமாய் மறந்த
போன தலைமுறைக்கு சிவாஜி
...
அன்று நடிப்பில் வீரமுட்டினார்

அன்று கட்டபொம்மா நீ ஆங்கிலேயனை கேட்டாயா தெரியாது
"நீ என்ன மாமனா மச்சானா ..." என்று
இன்று உன்னையே தெரியாத இந்த தலைமுறைக்கு

அன்று ஆங்கிலேயனை நீ அழைத்தாயா தெரியவில்லை
வயலுக்கு நாற்றுநடவும், மங்கையர்க்கு மஞ்சளரைக்கவும்
இன்று விவசாயமே மறந்த, மஞ்சள்பூசவே மறந்த பல இந்தியர்க்கு

என்றும் மூச்சு காற்றும், குடிக்க நீரும் அபரிமிதமாய் கிடைப்பதால்
இவன் போல் பலரால் போராடி பெற்ற சுதந்திரத்திலும்
இன்றும் நச்சு கலக்கிறோம் சுதந்திரமாய்...

ஊமைத்துரை, துரைச்சிங்கம்(சகோதரர்கள்),
துரைக்கண்ணு (சகோதரி), ஈஸ்வரவடிவு(சகோதரி) தவிர
கட்டபொம்மன்கூட பிறந்த துரைகள் மூவர்

பாஞ்சாலங் குறிச்சியை விட்டு ஓடஓட விரட்டிய ஆலன் துரை,
கப்பம்கட்ட மறுத்ததால் விளக்கம் கேட்ட ஜாக்சன்துரை,
கட்டபொம்மனிடம் பயந்த துரைகள் இருவர்

கயத்தாறில் "தூக்கு கயிறே மேல்" என்று கர்ஜித்து
மனதாற்றில் தாக்கம் தந்து, வீரமாய் தூக்கில்ஏறிய
கட்டபொம்மன், ஆங்கிலதுரைகளே பயந்த ஒருவர்

அவன் பிறந்தநாளிலாவது நம் சந்ததியினர்க்கு
கட்டபொம்மன் சிறந்த வாழ்வை பகிர்ந்து
அவன் புகழ் வளர்ப்போம்...


இவன்




Like · ·

Tuesday, January 1, 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2013

மாற்றம் என்பது மாறாதது
மாற்றம் மதியை மருங்க செய்யும்
மனம் மருண்டு போகும்
2011 மாறியது 2012க்கு மாறியது
இதே நாளில் ஒரு வருடம் முன்
இன்றிருந்த அதே கலக்கம் அன்று

 

திரும்பி பார்த்தால் ஒரு வருடம்
விரும்பி வந்த இன்பங்கள் உண்டு
விரும்பாமல் தங்கிய துன்பங்கள் சில

இன்பங்களை சுகித்த மனம்
துன்பத்தை சகித்த கணம்
இரண்டும் கழிந்தன தினம்

இதுதான் வாழ்க்கை!!!

(Teen)டீன் இல் அடி எடுத்து
வைக்கும் நூற்றாண்டு 2013
பள்ளிக்கு செல்லும் குதுகலத்துடன்

வளங்களை தரட்டும் என புதிய ஆண்டை இனிதே வரவேற்போம்
மனங்களை மகிழ்கும் இனிய ஆண்டை இனிதே வரவேற்போம்
தனங்களை தருவிக்கும் வரும் ஆண்டை இனிதே வரவேற்போம்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\


© ஆடலரசன்@Natarajan மற்றும் குடும்பத்தினர் -2013

 
 

Friday, October 19, 2012

சிவகாமி நடராஜனின் நவராத்திரி கொலுவுக்கு ஒரு அழைப்பு

அழைப்போர்,
இடுப்பொடிய படி செய்தவரும் (நடராஜன்)
அடுக்கடுக்காய் அணிவகுத்தவரும் (சிவகாமசுந்தரி)
மிடுக்காய் உதவியவர்களும் (ஸ்ருதி, அதிதீ மற்றும் ஹரிஷ்)

நவராத்திரி கொலுவிற்கு வாருங்கள்
வண்ண வண்ண வர்ணங்கள் காணுங்கள்
 
எங்கள் கொலுவில்
தமிழ் கலாச்சார திருமணம் பாருங்கள்

விருந்தினர் யார் ? யார் ?
முதலில் நீங்கள்!!!

அருகில் மணமக்கள் வீட்டாருடன்
அமீரகத்து உடை அணிந்த
மணமகனின் நண்பர் மனைவியுடன் வந்திருக்க

செவிக்கு உணவாய்
பாட்டு பாடுவோர்
நம் இசையாம்
நாதஸ்வரமும் மேளமும்
காற்றில் கலந்து வர

சமையலுக்கு
செட்டியார் செட்டிச்சியின்
காய் கனிகள்
உற்றார் உறவுக்கு விருந்தளிக்க

இருபுறமும் மணமக்களை காண வந்தோரின்
விலை உயர்ந்த வாகனங்கள் (உபயம் கடைக்குட்டி ஹரிஷ்)

உங்களை வீட்டு
வாண்டுகளை மகிழ்விக்க
காட்டு விலங்குகள்
தங்கள் குட்டிகளுடன்
அணிவகுப்பு...

தசாவதாரம் கமலின் படம் அல்ல
எங்கள் கொலுவில்
இறைவனின் அவதார
அணிவகுப்பின் அழகை
வாயால் எப்படி சொல்ல
வந்து பாருங்கள் மெல்ல
ஊரெல்லாம் சொல்ல...

கண்ணன் மழலை சிரிப்புடன்
அம்மன்களில் பல,
படிகளில் அணிவகுப்பு...

பல வடிவங்களில் விநாயகர்
தம்பி முருகருடன்
அருள் பாலிக்க
வரன் பெற்றிடுங்கள்
எங்கள் கொலுவில்..

அதிசயித்து பார்க்க
சாய்ந்த பிசா கட்டிடம் (Pisa Tower)
உயர்ந்த ஐபில் (eifil tower)பாரிஸில் இருந்து
விண்ணை தொடும் நம் புர்ஜ் க்ஹலிபா (Burj Khalifa)
எகிப்தின் பிரமிட் (Pyramid) அதிசயம்
உங்கள் வாய் பிளக்க வைத்திடும் ...

பிளந்த வாய்க்கு
கிண்டலுடன்
சுண்டலும் உண்டு
வாண்டுகளுடன்
வாருங்கள்
எங்கள் கொலுவிற்கு ....


இங்ஙனம் அழைப்போர்,

 இடுப்பொடிய படி செய்தவரும் (நடராஜன்)
அடுக்கடுக்காய் அணிவகுத்தவரும் (சிவகாமசுந்தரி)
மிடுக்காய் உதவியவர்களும் (ஸ்ருதி, அதிதீ மற்றும் ஹரிஷ்)